fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி நகர அறிவு சார் மையக் கட்டிடம் திறப்பு

தூத்துக்குடி நகர அறிவு சார் மையக் கட்டிடம் திறப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் 204 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவிலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் 1,335 கோடியே 86 லட்சம் ரூபாய் செலவிலும், நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் சார்பில் 258 கோடியே 11 லட்சம் ரூபாய் செலவிலும், பேரூராட்சிகளின் இயக்ககத்தின் சார்பில் 56 கோடியோ 94 லட்சம் ரூபாய் செலவிலும், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 78 கோடியே 42 லட்சம் ரூபாய் செலவிலும் முடிவுற்ற திட்டப்பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.


அதனை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில், சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ.200.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள நகர அறிவு சார் மையக் கட்டிடத்தினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார். உடன் மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, மேயர் ஜெகன், மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img