fbpx
Homeபிற செய்திகள்என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் பட்டய வகுப்புகள் தொடக்க விழா

என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் பட்டய வகுப்புகள் தொடக்க விழா

என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட் டோருக்கான பட்டயம், முதுநிலை பட்டய வகுப்புகள் தொடக்க விழா நேற்று (செவ்வாய்க்கிழமை) நடை பெற்றது.

நெய்வேலியில் செயல்படும் தெற்கு மண்டல தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவனம், என்எல்சி இந்தியா ஆகியவை இணைந்து, என்எல்சி சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் நிறுவனத் திட்டங்களுக்கு வீடு, நிலம் வழங்கிய மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த (பிஏபி அல்லாத) வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மின்சக்தித் துறையில் பட்டயம், முதுநிலை பட்டயப்படிப்புகளுக்கான பயிற்சியை அளித்து வருகின்றன.

நெய்வேலியில் நேற்று நடைபெற்ற விழாவில் என்எல்சி தலைவர் பிரசன் னகுமார் மோட்டுப்பள்ளி முன்னிலையில் தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவன பொது இயக்குநர் திரிப்தா தாகூர் பயிற்சி வகுப்பை தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் என்எல்சி தலைவர் பேசுகையில், நெய்வேலி திட்ட ங்களால் பாதிக்கப் பட்டவர்களுக்காக இந்தப் பயிற்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றார். மேலும், தற்போது வழங்கப் பட்டு வரும் என்.பி.டி.ஐ. பட்டய படிப்பில் கூடுதலாக புதுப்பிக்கத் தக்க ஆற்றல் பிரிவை சேர்க்கும்படி பரிந்துரைத்தார்.

சேதிய மின்சக்தி பயிற்சி நிறுவன பொது இயக்குநர் திரிப்தா தாகூர் பேசுகையில், இதுபோன்ற பட்டய பயிற்சிகள் நாட்டிலேயே முதல் முறையாக வழங்கப்படுகின்றன. இதில் கடந்த 3 ஆண்டுகளாக பயிற்சி பெற்ற அனைவரும் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

இங்கு பயிற்சி முடிக்கும் அனைவரும் அதிகபட்ச ஊதியத்துடன் 100 சதவீதம் வேலைவாய்ப்பு பெறுவது உறுதி என்றார். நிகழ்ச்சியில் என்எல்சி இயக்குநர்கள் கே.மோகன் ரெட்டி,சமீர் ஸ்வ ரூப்,எம்.வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img