இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் உட்கோட்ட பகுதிகளில் குற்றத் தடுப்பு நடவடிக் கையாக “நகரும் சோதனைச் சாவடி” நேற்று இராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் சந்திரகலா, மற்றும் மாவட்ட எஸ்.பி. அய்மன் ஜமால் ஆகியோரால் துவக்கி வைக்கப்பட்டது.
இந்த சோதனைச் சாவடியானது பல்வேறு பிரத்தியேக கருவிகள் கொண்டு அமைந்துள்ளது. இணைய வழி கண்காணிப்பு கேமராக்கள், புலன்விசாரணை மென்பொருள் கருவிகள், தடய அறிவியல் கருவிகள், செல்போன் ஆய்வு மென்பொருள் கருவி என புலன் விசாரணைக்கு தேவையான அனைத்து அடிப்படை கருவிகளை உள்ளடக்கிய இன்வெஸ்டிகேஷன் யூனிட் மற்றும் அசாதாரண சூழ்நிலைகளில் சட்ட ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வர தேவையான லத்தி, கிரவுட் கண்ட்ரோல் ரோப், கிரவுட் மேனேஜ்மென்ட் பேரிகேட்ஸ், சர்ச் லைட், வார்னிங் லைட், பிரேக்கர், லேடர் என அசாதாரண நிலைகளில் பொதுமக்களை பாதுகாக்க தேவை யான அனைத்து கருவிகளும் உள்ள டக்கிய கண்ட்ரோல் யூனிட் ஒன்றும் உள்ளது.
மேலும், காவலர்கள் ஓய்வெடுப் பதற்காக லைட் பெட் மற்றும் தடை யில்லா மின்சார வசதி செய்யப் பட்டுள்ளது. மேலும் இந்த நகரும் சோதனை சாவடியா னது தேவைக்கேற்ப பல்வேறு கிராமங் களில் முகாமிட்டு அசாதாரண பிரச்சினைகளை கையாளுவதற்கும் சம்பவம் நடந்த இடத்திலேயே புலன் விசாரணை மேற்கொள்ள மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட் டது.
இந்நிகழ்ச்சியில் தொடர்ச்சியாக அரக்கோணம் உட்கோட்ட பகுதி களில் காணாமல் போனதாக புகார் தெரிவிக்கப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 10 லட்சம் மதிப்புடைய 54 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
காவல் உதவி செயலி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இணைந்து கையொப்பமிட்டு விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் அரக்கோணம் நகர காவல் ஆய்வாளர் சந்திரகுமார், அரக்கோணம் கிராமிய காவல் ஆய்வாளர் சிவகுமார், அரக் கோணம் வட்டாட்சியர் வெங்கடே சன், அரக்கோணம் நகராட்சி ஆணையர் ஆனந்தன், பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் ஆகி யோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.



