பொள்ளாச்சியில் மணக்கடவு கிராமத்தில் உள்ள வாணவராயர் வேளாண்மை கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் வேளாண் பட்டய படிப்பின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரக வேளாண்மை பணி அனுபவத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் அக்ஷயா, தீஷ்னா, ஜனனி, கிருத்திகா, நிஷா, சக்தி, ஷண்முகப்பிரியா, ஸ்ரீதிகா மற்றும் தனிஷா ஆகிய 9 மாணவிகள் கொண்ட குழுவானது நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதியில் இணைக்கப்பட்ட அக்கியம்பட்டி என்னும் கிராமத்தில் பூஜ்ஜிய ஆற்றல் குளிர் அறைக்கான செயல் விளக்கமானது நடத்தப்பட்டது.
கோடை காலத்தில் மக்கள் பெரிதும் விரும்பும் காய்கறிகள் மற்றும் பழங்களை நீண்ட நேரம் சேமித்து வைக்க உதவும் இம்மலிவான தொழில்நுட்பத்தின் பயன்கள் குறித்தும் அதனை உருவாக்கும் முறைமை பற்றியும் ஒரு சிறந்த செயல் விளக்கமானது வாணவராயர் வேளாண்மை கல்லூரி மாணவிகளால் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அக்கியம் பட்டி கிராமத்து ஊர் மக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.