நீலகிரி மாவட்டம், உதகை, குந்தா தாலுகாக்களில் 420 பயனாளிகளுக்கு ரூ.2.08 கோடி மதிப்பில் வீட்டுமனைபட்டா வழங்கப்பட்டது.
உதகை இளைஞர் படுகர் சங்க மண்டபத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி எம்பி – ஆ.ராசா ஆகியோர் இணைந்து பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினர்.
உதகை வட்டத்தில் 149 பயனாளிகளுக்கு ரூ.18.11 லட்சம் மதிப்பிலும், குந்தா வட்டத்தில் 271 பயனாளிகளுக்கு ரூ.1.89 கோடி மதிப்பிலும் பட்டாக்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேசுகையில், ‘‘பொதுமக்கள் பயன்பெறும் வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். எனவே, பொதுமக்கள் தமிழக அரசின் திட்டங்களுக்கு தங்களின் முழு ஆதரவை வழங்க வேண்டும்’’ என்றார்.
விழாவில், எம்பி-ஆ.ராசா பேசி யதாவது: நீலகிரி மாவட்டத்தில் நேற்று கூடலூர் பகுதியில் 420 பயனாளிகளுக்கு ரூ.11.68 கோடி மதிப்பில் பட்டா, பள்ளிக் கல்வித்துறை சார்பில் 657 மாணவ, மாணவிகளுக்கு ரூ.84 லட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து தற்போது குந்தா, உதகை வட்டங்களில் 420 பயனாளிகளுக்கு ஆதிதிராவிடர் நத்தம் நிலங்களில் வழங்கப்படும் வீட்டுமனை ஒப்படைக்கான இணையவழி பட்டாக்கள் வழங் கப்பட்டுள்ளன. எனவே, அரசுத் திட்டங்களை பயன்படுத்திபொது மக்கள், தங்களது வாழ்வா தாரத் தை உயர்த்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கீர்த்தி பிரியதர்சினி, உதகைநகர்மன்றத்தலைவர் வாணீஸ்வரி, துணைத் தலைவர் ரவிக்குமார், வட்டாட் சியர்கள் சரவணகுமார் (உதகை), கலைச்செல்வி (குந்தா), மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஜார்ஜ், பேரூராட்சித் தலைவர்கள் கௌரி (சோலூர்), சந்திரலேகா (பிக்கட்டி), சத்தியவாணி (கீழ் குந்தா) உள்பட பலர் கலந்துகொண்டனர்.