சர்வதேச தரம் வாய்ந்த ஹானர் X9b ஸ்மார்ட் போன் தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உலகளவில் பாராட்டுகளைப் பெற்ற ஹானர் X சீரிஸ் வரிசையை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் ஹானர் X9b ஸ்மார்ட் போன் வெளியாகி உள்ளது.
அதேபோல ஹானர் X9b 5G ஸ்மார்ட்போன் மட்டுமல்லாது, இந்தியாவில் இணைக்கப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்பை நிறுவும் நோக்கத்துடன், சிறந்த ஆடியோவை வழங்கும் ஹானர் சாய்ஸ் X5 மற்றும் பிட்னஸ் டிராக்கிங்கிற்கான ஹானர் ஹெல்த் செயலி பொருத்தப்பட்ட ஹானர் சாய்ஸ் ஸ்மார்ட் வாட்ச் ஆகியவற்றையும் பிராண்ட் அறிமுகப்படுத்துகிறது.
ஹானர் X9b– எக்ஸ்ட்ரா ஆயுளுடன் சிறப்பம்சங்களுக்கு புது விளக்கம் கொடுக்கிறது.
ஹானர் X9b ஆனது ஹானர் அல்ட்ரா-பவுன்ஸ் 360° ஆன்டி-டிராப் டிஸ்ப்ளேவுடன் வருகிறது.
இது நீடித்து உழைக்கும் மற்றும் நிலைத்திருக்கும். அதன் ஏர்பேக் குஷனிங் தொழில்நுட்பம் மற்றும் போனை சுற்றியுள்ள புதுமையான ஷாக்-அப்சார்பிங் சிஸ்டம் 1.5 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்தாலும் உடையாமல் பாதுகாக்கிறது.
நேர்த்தியான மெல்லிய வடிவமைப்பில் எக்ஸ்ட்ரா ஆயுள் கொண்ட 5800mAh பேட்டரி மூலம், பயனர்கள் சார்ஜ் தீர்ந்துபோகுமோ என்பது பற்றி கவலைப்படாமல் நாள் முழுவதும் பயன்படுத்தலாம்.
அதிக நேரம் பயன்படுத்தும் வகையிலும் கண்ணுக்கு அசௌகரியம் இல்லாத வகையிலும், ஹானர் X9b ஸ்மார்ட்ஃபோனில் ஹார்டுவேர் லெவல் லோ ப்ளூ லைட்டுடன் டைனமிக் லைட் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பயனர்களுக்கு கண்களில் சோர்வு ஏற்படாது.
ஹானர் X9b 5G ஸ்மார்ட் போன் ரூ.25,999 என்ற MOP விலைக்கு விற்கப்படும். பிப்ரவரி 16 மதியம் 12 மணி முதல் Amazon.in, பிராண்டின் வலைத்தளமான – www.explorehonor.com மற்றும் உங்களுக்கு அருகிலுள்ள மெயின்லைன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் முதல் விற்பனை நாளில் இந்த ஸ்மார்ட்ஃபோனை வாங்கும்போது அனைத்து வங்கி அட்டைகள் மற்றும் ஐசிஐசிஐ வங்கி பயனர்கள் ரூ.3000 உடனடி வங்கி தள்ளுபடி அல்லது ரூ.5000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையைப் பெறுவார்கள். இதன் மூலம் விலை ரூ.22,999 ஆக குறைகிறது.