fbpx
Homeபிற செய்திகள்இந்துஸ்தான் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் 19வது பட்டமளிப்பு விழா

இந்துஸ்தான் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் 19வது பட்டமளிப்பு விழா

கோவை இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கலலூரியின் 19வது பட்டமளிப்பு விழா கலாம் ஆடிட்டோரியத்தில் நடந்தது. இதனை இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங் காவலர் கொங்கு மாமணி டி.ஆர்.கே.சரசுவதி மற்றும் இணைச் செயலாளர் டாக்டர் பிரியா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி வைத்தனர். இதில் சுமார் 1500க்கும் மேற்பட்ட பெற் றோர்கள் கலந்து கொண்டனர்.

கல்லூரி முதல்வர் ஜெயா, சிறப்பு விருந்தினர் வேல்ராஜ், துணைவேந்தர், அண்ணா பல்கலைக்கழகம் சென்னை மற்றும் கௌரவ விருந்தினர் ரகுநாதன்-சமூக தொழில் முனைவோர், நிர்வாக அறங்காவலர் கொங்கு மாமணி சரசுவதி, நிர்வாகச் செயலர் பிரியா, கருணாகரன், சிஇஓ, பட்டதாரிகள், பெற்றோர்கள், துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்களை வரவேற்றார்.

கல்லூரியின் சாதனைகளை விளக்கும் ஆண்டறிக்கையை கல்லூரி முதல்வர் ஜெயா வாசித்தார். சிறப்பு விருந்தினராக வேல்ராஜ், (துணை வேந்தர் – அண்ணா பல்கலைக்கழகம் , சென்னை) பங்கேற்று பட்டமளிப்பு உரை நிகழ்த்தி 2022ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகள் சுமார் 1425க்கும் மேற்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கு பட்டப்படிப்பு, சான்றிதழ் வழங்கினார். மற்றும் அண்ணா பல்கலைக்கழக தேர்வில் துறை வாரியாக முதலிடம் பிடித்த 25 பட்டதாரிகளுக்கு விருதுகளையும் அவர் வழங்கினார்.

அவர் தம் உரையில், மாணவர்களின் பொறுப்புகளை குறிப் பிட்ட அவர், மனித வளமே நமது நாட்டின் பலம். இளம் பட்டதாரிகளுக்கு அவர்களின் தனிப்பட்ட பலத்தை அறிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார். மேலும் போட்டி நிறைந்த உலகில் வெற்றிகரமான நபராக இருப்பதற்கு அறிவு, திறமை மற்றும் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்கமாக எடுத்துரைத்தார்.

அதனை தொடர்ந்து மனித வளமே நமது நாட்டின் பலம். கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஸ்டார்ட்அப்கள் உருவாகியுள்ளன. அடுத்த மூன்று தசாப்தங்களுக்கு ஆட்டோமேஷனின் முக்கியத்துவத்தையும் அதன் தேவைகளையும் செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் தொழில்நுட்பத்தின் பங்களிப்பை எடுத்துரைத்தார்.

மேலும், வேளாண்மை, உள் கட்டமைப்பு மேலாண்மை, சுகாதார மேலாண்மை, எரிசக்தி மேலாண்மை, சுற்றுச்சூழல் மேலாண்மை, கழிவு மேலாண் மை, நீர் மேலாண்மை, பேரிடர் மேலாண்மை துறைகளில் தொழில் முனைவோர் மற்றும் மகத்தான வாய்ப்புகளின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.

என்ஜினீயர்கள் தொழில் தொடங்கி, வெளிநாடுகளுடன் போட்டி போட்டு வெற்றி பெறவும், ஆராய்ச்சி மூலம் புதிய தயாரிப்புகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஒருவரின் வெற்றிகரமான வாழ்க்கைக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிமிருந்து வரும் ஆசிர்வாதம் மிகவும் முக்கிய மானது மேலும் வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை மதிக்குமாறு மாணவர்களை ஊக்குவித்தார்.

அவரை தொடர்ந்து கௌரவ விருந்தினர் ரகுநாதன், இணைச் செயலர் பிரியா சதீஷ் பிரபு, இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி, கருணாகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் துறைவாரியாக ரேங்க் அடிப்படையில் முதலிடம் பெற்ற 25 பட்டதாரிகள் அனைவருக்கும் கேடயம் மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

மதியம் முன்னாள் மாணவர்கள் கூட்டம் கல்லூரி வளாகத்தில் நடந்தது. பட்ட மளிப்பு விழாவை பேராசிரியர் சரவணசுந்தரம் மற்றும ஆனந்தமூர்த்தி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

நிகழ்ச்சியில் பங்குபெற்ற பட்டதாரிகள், பெற்றோர்கள், பல்வேறு குழு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.’

படிக்க வேண்டும்

spot_img