fbpx
Homeபிற செய்திகள்மகாராஷ்டிரா வங்கி சார்பில் இந்தி திவஸ் கொண்டாட்டம்

மகாராஷ்டிரா வங்கி சார்பில் இந்தி திவஸ் கொண்டாட்டம்

புனே நகரில் பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா சார்பில் இந்தி திவஸ் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, வங்கியின் நிர்வாக இயக்குனறர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஏ.எஸ்.ராஜீவ் தலைமை வகித்தார்.

பிரபல திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை எம்.எஸ்.ஆர்யா ஷர்மா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். செயல் இயக்குனர்கள் ஆஷீஷ் பாண்டே, ரோஹித் ரிஷி, முதன்மை புலனாய்வு அலுவலர் அமித் ஸ்ரீவஸ்தவா மற்றும் பாங்க் ஆப் மகாராஷ்டிரா தலைமை அலுவலக பொது மேலாளர்கள்,
நிர்வாகிகள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

பொது மேலாளர் கே.ராஜேஷ் குமார், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பணியாளர்களை வரவேற்று, வங்கியில் இந்தி மொழி நடைமுறைப்படுத்தல் குறித்து எடுத்துரைத்தார்.

இந்த விழாவில் இந்த சந்தர்ப்பத்தில், வங்கிகளின் ஆண்டுத் தொகுப்பு இ-இதழான மஹாபேங்க் சம்வத் சரிதா வெளியிடப்பட்டது. மேலும் அகில இந்திய அளவில்
நடத்தப்பட்ட பல்வேறு ஹிந்திப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img