fbpx
Homeபிற செய்திகள்‘ஆரோக்கியம் மிகுந்தவற்றை பரிசாக வழங்கலாம்’ ஊட்டச்சத்து நிபுணர், ஆலோசகர் வலியுறுத்தல்

‘ஆரோக்கியம் மிகுந்தவற்றை பரிசாக வழங்கலாம்’ ஊட்டச்சத்து நிபுணர், ஆலோசகர் வலியுறுத்தல்

தீபாவளி பண்டிகை காலத்தில் விருந்தினர்களுக்கு ஆரோக்கியம் மிகுந்த மகிழ்ச் சியை அளிக்கும் பரிசு தொடர் பாக 3 யோசனைகளை ஊட் டச்சத்து நிபுணரும் உடல் ஆரோக்கிய ஆலோசகருமான ஷீலா கிருஷ்ணசாமி கூறியுள் ளார். பாதாமில் உடல் ஆரோக்கி யத்திற்கு தேவையான ஏராளமான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.

எனவே இது உங்கள் விருந்தினர்களுக்கான ஒரு சிறந்த பரிசாக இருக்கும். அவை நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆரோக் கியமான கொழுப்புகள் மற்றும் சில வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருப்பதால் அவை உடல் ஆரோக்கியத்திற்கான சிறந்த சிற்றுண்டியாகும்.

பாதாம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு உடல் எடை பராமரிப்பு உள்ளிட்ட ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் முக்கிய பங்களிக்கிறது. எனவே பல்வேறு வகையான பாதாம்களை தேர்வு செய்து அவற்றை அழகான ஒரு கூடையில் வைத்து அலங்கரித்து பரிசாக வழங்குங்கள்.

ஆர்கானிக் மூலிகை தேநீர், சர்க்கரை இல்லாதமியூஸ்லி மற்றும் டார்க் சாக்லேட்டுகள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்களை சேர்த்து வழங்கிடுங்கள்.

பருவகாலத்திற்கேற்ற பழங்கள் மற்றும் ஆரோக்கியமான சமையல் குறிப்பு களுடன் கூடிய புத்தகங்களையும் சேர்த்து வழங்கலாம்.

வறுத்த கொண்டைக்கடலை, பாப்கார்ன், மக்கானா மற்றும் பாதாம் போன்ற பருப்பு வகைகள் நிறைந்த சிற்றுண்டி பரிசு பெட்டியை தயார் செய்யுங்கள். அவற்றுடன் வீட்டில் தயார் சிற்றுண்டிகளையும் சேர்த்து பரிசாக அளியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img