fbpx
Homeபிற செய்திகள்பி.எஸ்.ஜி.ஆர். கிஷ்ணம்மாள் கல்லூரியில் ஆரோக்கிய விழிப்புணர்வு கருத்தரங்கு

பி.எஸ்.ஜி.ஆர். கிஷ்ணம்மாள் கல்லூரியில் ஆரோக்கிய விழிப்புணர்வு கருத்தரங்கு

பி.எஸ்.ஜி.ஆர். கிஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் ஆரோக்கியம் மற்றும் நலன் மன்றம் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்வு மாணவர்களின் முழுமையான நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களிடையே ஆரோக்கிய விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய நியமன அதிகாரி டாக்டர் டி. அனுராதா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

தொடர்ந்து அவர், கலப்பட உணவுகளை அடையாளம் காணும் செயல்முறையை பீளமேடு கிளை அதிகாரி ஆரோக்கியராஜ் பிரபுவுடன் இணைந்து நிகழ்த்தினார்.

இதில் கல்லூரி செயலாளர் டாக்டர் என். யசோதாதேவி வரவேற்புரை ஆற்றினார். 2014 ஆம் ஆண்டு தொடங்கிய ஹெல்த் கேர் கிளப் இப்போது ஹெல்த் அண்ட் வெல்னஸ் கிளப் ஆக உயர்த்தப்பட்டமை குறித்து பேசினார்.

உணவு தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை துறை பி.எஸ்.ஜி.ஆர். கிஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியை, தேசிய உணவு தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிறுவனம் தஞ்சாவூர் உடன் ஒப்பந்தம் மேற்கொண்ட முதல் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக மேன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதில் மாணவிகள், பேராசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img