கோவை, அவிநாசி ரோட்டில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் “கோ கிளேம் “ சார்பில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி விற்பனை தொடக்க விழா இன்று (25ந் தேதி) நடைபெற்றது.
வருகிற 27ந் தேதி முடிய 3 நாட்கள் நடைபெறும்
இந்த கண்காட்சியை கோ கிளேம் ஒருங்கிணைப்பாளர்கள் ஹீனா மற்றும் ராகுல் தலைமையில் கோவை பெண் தொழில் அதிபர்கள் திவ்யா விக்ரம், சந்தோஷி ராஜேஷ், மாலினி ஜெயமுருகன், நிர்மலா குருபிரசாத், மேரி பீனா,லலிதா ரஞ்சித் மீனா, விஜி கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



