fbpx
Homeபிற செய்திகள்ஹாலோவேர் நிறுவனம் 4 புதிய வகை மடிக்கணினிகள் அறிமுகம்

ஹாலோவேர் நிறுவனம் 4 புதிய வகை மடிக்கணினிகள் அறிமுகம்

கணிப்பொறி உற்பத்தி துறையில் வேகமாக வளர்ந்து வரும் ஹாலோவேர் நிறுவனம்
தங்கள் விரிவாக்க பணிகளின் ஒரு பகுதியாக தற்போது மடிக்கணினி விற்பனை துறையில் நுழைவதாக அறிவித்துள்ளது.

சென்னையில் நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில் ஹாலோவேர் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ராகவேந்திரா கணேஷ் மாணவர்களுக்கான “கிஸ்மோஸ் எடுகேஷன்“ கல்வி மடிக்கணினி, பணிபுரியும் நிபுணர்களுக்கான “கிஸ்மோஸ் எக்ஸிகியூட்டிவ்”பணி மடிக்கணினி மற்றும் விளையாட்டு பிரியர்களுக்கான “கிஸ்மோஸ் பியரி” விளையாட்டு மடிக்கணினி, கடினமான தொழில்துறை தர வேலைகளுக்கான “கிஸ்மோஸ் ரக்டு” மடிக்கணினி என 4 வகையான மடிக்கணினிகளையும் மற்றும் 1 டேப்லட் வகை கணினியையும் பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

ஒவ்வொரு ஆண்டும் நிறுவனத்தின் வளர்ச்சி 200% சதவீதமாக அதிகரித்து வருவதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

படிக்க வேண்டும்

spot_img