2024 நாடாளுமன்றத் தேர்தல், உரிமை மீட்பு ஸ்டாலினின் குரல், பொதுக்கூட்டம் வருகிற 17ம் தேததி (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு கோவை கொடீசியா மைதானத்தில் நடைபெற உள்ளது.
இக்கூட்டம் தொடர்பான கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணியளவில், காளப்பட்டி சாலை, சுகுணா மினி ஹாலில் நடந்தது. கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) தலைமை தாங்கினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
வருகிற 17-2-2024, சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில், கோவை கொடீசியா மைதானத்தில், நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, முதல் கட்டமாக நடைபெற உள்ள, கோவை நாடாளுமன்ற தொகுதி யின், மாபெரும் பரப்புரைக் கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தல் 2024, “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” என்ற தலைப்பில், தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க, கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் குரலாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கலந்து கொண்டு சிறப்புரை யாற்றுகிறார்.
இக்கூட்டத்தில், கோவை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட, அனைத்து மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைக்கழக நிர்வாகிகள், மேயர், துணைமேயர், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகரக் கழக, ஒன்றியக் கழக, பகுதிக் கழக, பேரூர்க்கழக, வட்டக்கழகச் செயலாளர்கள், நகராட்சி தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், அனைத்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் தலை வர்கள், அமைப்பாளர்கள், துணை தலைவர்கள், துணை அமைப்பாளர் கள், நகரக் கழக, ஒன்றியக் கழக, பகுதிக்கழக, பேரூர்க் கழக, வட்டக்கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், கழகத் தொண்டர்கள், கழக உடன்பிறப்புகள், அனைத்து ஙிலிகி-2 பாக முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட பதினைந்தாயிரம் பேருக்கு மேற்பட்ட கழகத் தோழர்கள், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்பது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
கழகத் தலைவர் தலைமையில் சீரிய முறையில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 1,000, அனைத்து மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி, கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம், ரூபாய் 5 லட்சம் வரையிலான முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம், புதிதாக 1.5 லட்சம் விவசாயிகளின் பம்ப்செட்களுக்கு, கட்டணமில்லா மின்சாரம் இணைப்பு. மக்களைத் தேடி மருத்துவம், 18 லட்சம் பள்ளி மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டி திட்டம், இன்னுயிர் காக்கும் 48 திட்டம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை படைத்து வரும், முதலமைச்சர் அவர்களின் தலைமையில், கோவை நாடாளுமன்ற தொகுதியில், லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிபெற செய்ய அனைவரும் இணைந்து இரவு பகல் பாராமல் செயல்படுவோம்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
இந்நிகழ்வில், கழக சொத்துப் பாதுகாப்புக் குழு துணைத் தலைவர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, கோவை மாநகராட்சி மேயர் கல் பனா ஆனந்தகுமார், மாநகர் மாவட்ட துணை செயலாளர் கல்பனா செந்தில், மாவட்ட பொருளாளர் எஸ்.எம். பி.முருகன், கோவை வடக்கு மாவட்ட துணை செயலாளர் அசோக்பாபு ஆறுக்குட்டி, கோவை தெற்கு மாவட்ட துணை செயலாளர் பி.கே.சாமிநாதன், திருப்பூர் வடக்கு மாவட்ட துணை செயலாளர் எஸ்.குமார், தலைமைக் கழக நிர்வாகிகள் பி.நாச்சிமுத்து, பி.ஆர்.அருள்மொழி, மு.இரா.செல்வராஜ், நா.முருகவேல், அ.தமிழ்மறை, வி.ஜி.கோகுல், மீனா ஜெயகுமார், பனப்பட்டி தினகரன் (முன்னாள் எம்எல்ஏ.), தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், மெட்டல் கண்ணப்பன், ஆனந்தகுமார், டி.பி.சுப்பிரமணியன், இருகூர் சந்தி ரன், பொதுக்குழு உறுப்பினர்கள் வெ.ந.உதயகுமார், மு.மா.ச.முருகன், ஆடிட்டர் சசிகுமார், மணிகண்டன், ரகு துரைராஜ், ரபீதீன், கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட் பட்ட சிங்காநல்லூர், கோவை தெற்கு, கோவை வடக்கு, கவுண்டம் பாளையம், சூலூர், பல்லடம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட நகர, பகுதி, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள் பங்கேற்றனர்.