சேலம் மாவட்டம் வேடுகத்தாம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஆசிரியர் எஸ். அனுராதா தலைமை தாங்கினார். விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் டி.மாணிக்கம் முன்னிலை வகித்தார் .
விழாவின் துவக்கமாக சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்தனர். உதவி தலைமை ஆசிரியர் தீபா ஆண்டறிக்கை வாசித்தார்.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக வேடுகத்தாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.லாவண்யா செல்வப்பிரகாசம், பெற்றோர் ஆசிரியர் கழகத்துணைத் தலைவர் ஜெகதீசன், செயலாளர் விஜயகுமார், பொருளாளர் கே. சுரேஷ், கல்வியாளர் பழனிச்சாமி, கொண்டலாம்பட்டி காவல் ஆய்வாளர் டி. கண்ணன், எஸ்.எம்.சி தலைவர் இ.சுமதி கலந்து கொண்டனர். தலைமையாசிரியர் எஸ்.அனுராதா, ஆங்கில பட்டதாரி ஆசிரியர் கல்யாண குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களை கௌரவித்தனர். வேடு கத்தாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.லாவண்யா செல்வபிரகாஷ் சிறப்புரை வழங்கினார். தமிழாசிரியர் டி.கீதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
விழாவில் பள்ளி மாணவ மாணவி களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கல்வியில் சிறந்து விளங்கியவர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வர்களுக்கும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கி வாழ்த்து கூறினர். தமிழாசிரியர் ஹெச்.ஷேக் வசீர் நலீம் நன்றி கூறினார்.