சிதம்பரம் திரு இருதயஆண்டவர் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் வின்சென்ட் தே பவுல் சபையினரால் தொடர்ந்து 20 ஆண்டுகளாக ரத்ததான முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் புனித வெள்ளியன்று இயேசு நமக்காக ரத்தம் சிந்தினார், நாமும் பிறர் வாழ ரத்தம் கொடுப்போம் என்ற நோக்கில் பங்குதந்தை ஜோசப் ஜெரால்டு தலைமையில் நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரத்ததான முகாம் நடைபெற்து.
நிர்மலா பள்ளி தலைமை அருட்சகோதரி மரியம்மாள், ஷீலா மார்கிரேட் ஆகியோர் முன்னிலையில் அரசு காமராஜ் மருத்துவமனை மருத்துவர் சிவகாமி, தலைமை செவிலியர் பிரிசில்லா, இமாகுலேட், ஆகியோர் அடங்கிய மருத்துவ குழு, முகாமை நடத்தினர்.
அனைத்து ஏற்பாடுகளையும் வின்சென்ட் தே பவுல் சபை தலைவர் ஜான் கென்னடி, செயலர் அற்புதராஜ், பொருளாளர் குருஸ்சகாயராஜா, துணைத் தலைவர் லாரன்ஸ், மூத்த, உறுப்பினர் ஸ்டீபன் ஆரோக்கியராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
சாமுவேல், பங்கு பேரவை தலைவர் மோகன் ஆரோக்கியராஜ் ஆகியோர் நன்றி கூறினர்.



