fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா: சிறந்த மாணவர்களுக்கு தங்கப் பதக்கம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா: சிறந்த மாணவர்களுக்கு தங்கப் பதக்கம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா இயன்முறை மருத்துவக் கல்லூரியின் 32வது  ஆண்டு இளங்கலை இயன்முறை மருத்துவம் மற்றும் 24ம் ஆண்டு முதுகலை இயன்முறை மருத்துவ பட்டமளிப்பு விழா  வேலுமணியம்மாள் கலையரங்கத்தில் நடைபெற்றது. 

இவ்விழாவில், எஸ்.என்.ஆர்.அறக்கட்டளை நிர்வாக இணை இயக்குனர் ஆர்.சுந்தர், எஸ். ஆர். எம் அறிவியல் தொழில் நுட்ப நிறுவனம் துணை  இயக்குனர் டாக்டர் வி.பி.ஆர். சிவக்குமார் 

மற்றும் கல்லூரி முதல்வர் வி .எஸ்  சீதாராமன் ஆகியோர் பட்டமளிப்பு விழாவை சிறப்பித்தனர். 

இவ்விழாவில் 94 இளங்கலை மற்றும் 33 முதுகலை மாணவ- மாணவிகள் பட்டம் பெற்றனர்.

இந்த நிகழ்வில் இளங்கலை 2018-2022ம் ஆண்டு மாணவி தங்கமதி, இளங்கலை 2019-2023 பூர்ணிமா, முதுகலை 2020 – 2022ம் ஆண்டு மாணவி பவுசி நிசா ஆகிய மாணவிகளுக்கு எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை நிர்வாகம் சார்பாக  தங்கப் பதக்ககம் வழங்கப்பட்டது. மேலும் சிறந்த இளநிலை பயிற்சி மாணவரான கர்ணனுக்கு பதக்கமும் சான்றிதழும் வழங்கப்பட்டன.

இறுதியாக  பேராசிரியர் சரவணன்  நன்றியுரை வழங்கினார் .

படிக்க வேண்டும்

spot_img