ஜி.கே.என்.எம். மருத்துவமனை இருதயவியல் துறையின் 50ம் ஆண்டு பொன்விழா சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.
ஜி.கே.என்.எம். மருத்து வமனையின் இருதயவியல் துறை, அதன் 50வது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடியது.
இந்த தருணத்தை நினைவுகூரும் வகையில், பெங்களூருவின் புகழ்பெற்ற இருதயநோய் நிபுணரும் கௌரவ நாடாளு மன்ற உறுப்பினருமான பேராசிரியர் மஞ்சுநாத் இருதயவியல் துறையின் 50 ஆண்டுகால பயணத்தை விவரிக்கும் பொன்விழா ஆண்டு சிறப்பு மலர் புத்தகத்தை வெளியிட்டார்.
ஜி.கே.என்.எம். மருத்துவமனை சார்பில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான மருத்துவ நிபுணர்களைக் கொண்ட இருதயவியல் பொன்விழா கருத்தரங்கம் ஏற்பாடு செய் யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் முன்னணி மருத்துவர்கள் மற்றும் இருதயநோய் நிபுணர்கள் உட்பட 250 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற நிபுணர்களான அமெரிக்காவின் மவுண்ட் சினாய் மருத்துவமனையின் தலையீட்டு இருதயவியல் இயக்குநர் டாக்டர் சமின் கே.சர்மா மற்றும் ஆஸ்திரேலியாவின் ராயல் பெர்த் மருத்துவமனையின் இருதயவியல் துறைத் தலைவர் டாக்டர் கிரஹாம் ஹில்லிஸ் ஆகியோர் முக் கிய உரைகளை நிகழ்த்தினர்.
தொடர்ந்து பேராசி ரியர் சி.என். மஞ்சுநாத் மற்றும் டாக்டர் கிரஹாம் ஹில்லிஸ் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.