கோவையில் நடைபெற்ற கேலோ இந்தியா தாங்கடா போட்டியில் மகாராஷ்டிரா, ராஜஸ்தான் வீரர்கள் வெற்றி பெற்றனர். கோவையில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பிரிவாக தாங்டா போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், ஹரியானா, பஞ்சாப், தமிழ்நாடு, அஸ்ஸாம், மணிப்பூர் உள்ளிட்ட 16 மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கணைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இதில், நேற்று நடைபெற்ற 18 வயது பிரிவில் 56 கிலோ எடை பிரிவுக்கான போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டியில் மகாராஷ்டிர வீரர் வைபவ் ஹேமந்த் 33-22 என்ற புள்ளிக் கணக்கில் பீகார் வீரர் சுபம் தேயை வீழ்த்தினார்.
2வது போட்டியில் ராஜஸ்தான் வீரர் அனில் சுரேஷ், லடாக் வீரர் முகமது முஸ்தபாவுடன் மோதினார்.
இதில், அனில் சுரேஷ், 26-13 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். 3வது போட்டியில் திரிபுரா வீரர் ஷகீல் நாத்தை மணிப்பூர் வீரர் கன்குஜன் சனந்த் சிங் 31-23 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். தொடர்ந்து, இறுதிச் சுற்றுகள் செவ்வாய்கிழமை நடைபெற்று பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.