திருப்பூரில் ரோட்டரி சங்கம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீச்சல் பயிற்சியை திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார்
முறையான நீச்சல் பயிற்சி இல்லாததன் காரணமாக தமிழகத்தில் ஆண்டுதோறும் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். எனவே அனைவருக்கும் நீச்சல் பயிற்சி கிடைத்திடும் வகை யில் திருப்பூர் திருமுருகன் பூண்டி ரோட்டரி சங் ம் சார்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீச்சல் பயிற்சி துவக்கப்பட்டது. திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் இதில் கலந்து கொண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீச்சல் பயிற்சியை துவக்கி வைத்தார்.
15 வேலம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நீச்சல் பயிற்சி மையத்தில் நடைபெறும் இந்த பயிற்சி முகாமில் முதற்கட்டமாக 20 மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க இருப்பதாகவும் தொடர்ந்து அடுத்தடுத்த கட்டங்களில் அரசு பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுத்து நீச்சல் பயிற்சி அளிக்க இருப்பதாகவும் ரோட்டரி சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீச்சல் பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் ரோட்டரி சங்கம் சார்பாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.