வேலூர் ஸ்ரீ புரத்தில் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்துடன், சேவாபாரதி மற்றும் விஸ்டார் நிதி சேவைகள் நிறுவனம் ஆகியன இணைந்து பொது மக்களுக்கான இலவச நடமாடும் மருத்துவ சேவை வாகனத்தை தொடங்கியுள்ளன.
வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் தமிழ்நாடு சேவாபாரதி அமைப்பு மற்றும் விஸ்டார் நிதி சேவைகள் நிறுவனம் இணைந்து ஸ்ரீசக்தி அம்மா ஆசியுடன் பொது மக்களுக்கு இலவச மருத்துவ சேவையை தேடிச் சென்று அளிக்கும் நடமாடும் மருத்துவ சேவையை தொடங்கின. இதன் தொடக்க விழா ஸ்ரீபுரத்தில் நடந்தது.
இதில் ஸ்ரீ சக்தி அம்மா முன்னிலையில் சிறப்பு விருந்தினராக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு நடமா டும் மருத்துவ சேவை வாக னத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விழாவில் கவுரவ விருந் தினர்களாக ஸ்ரீநாராயணி குழும நிறுவனங்களின் இயக்குனர் மற்றும் அறங்காவலர் என்.பாலாஜி, பொற்கோயில் இயக்குனர் சுரேஷ் பாபு, விஸ்டார் நிதி சேவைகள் தென்கிழக்கு போர்ட்ஃ போலியோ தலைவர் சந்தோஷ் குமார் ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.
விழாவில் சமர்பக சேவா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ராஜண்ணா, ஆர்எஸ்எஸ் வேலூர் மண்டலத் தலை வர் ஜெகதீசன் மற்றும் சேவாபாரதி தமிழ்நாடு துணைத் தலைவர் விவேகானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.