பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 373 மதிப்பெண்கள் பெற்ற கோவையைச் சேர்ந்த அஜிதா என்ற திருநங்கை மாணவிக்கு அவர் படிக்க விரும்பிய பிஎஸ்சி உளவியல் பட்ட வகுப்பில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் மூன்றாண்டுகளுக்கும் கட்டணமின்றி இலவச சேர்க்கை வழங்கப்பட்டது.
அவரின், சோக்கைக்கான விண்ணப்பத்தைக் கல்லூரி செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர்.சி.ஏ.வாசுகி மாணவியிடம் வழங்கினார்.