யூத் ஹாஸ்டெல்ஸ் அஸோசியேஷன் ஆப் இந்தியா கொங்கு கிளையின் சார்பில் பவளவிழா ஆண்டின் 44வது நிகழ்வாக சர்வதேச வனவியல் தினம், பாரம்பரிய தினம், சர்வதேச உடல் நலம் தினம், கல்லீரல் தினம் மற்றும் தேசிய கடல்வழி தின விழாக்கள் மாநகராட்சி இடையன்காட்டுவலசு அரசு துவக்கப்பள்ளியில் நடைபெற்றது.
யூத் ஹாஸ்டெல்ஸ் மாநில துணைத் தலைவர் டாக்டர்.ராஜா, சேர்மன் டாக்டர். ஐயப்பன், பொருளாளர் மஹேந்திரன், பாபு மற்றும் சூர்யா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு களை வழங்கினர்.இந்த நிகழ்வை கிளையின் தலைவர் பேராசிரியை சந்திரா தங்கவேல், தலைமை ஆசிரியர் தமிழ்ச்செழியன் மற்றும் பாபு ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.