தர்மபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் வரவேற்பு மற்றும் நிகழ்ச்சி குறித்த தொகுப்புரையுடன், விநியோகிப்பாளர்கள் சங்கத் தலைவர் நாகராஜன், செயலாளர் முகேஷ், பொருளாளர் சேகர் ஆகியோர் முன்னிலையில் தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர். கைலாஷ்குமார் அவர்கள் தலைமையில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி முகாம் தர்மபுரி கடைவீதி நகர வர்த்தகர் மஹாலில் நடைபெற்றது.
பயிற்சியில் உணவுப் பொருள் விநியோகஸ்தர்கள் தாங்கள் வணிகம் புரியும் இடங்களில் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் ஃபர்ஸ்ட் இன் ஃபர்ஸ்ட் அவுட் (திமிதிளி) முதலில் வரும் பொருள் முதலில் வெளியேற்றுதல், பொருட்களில் லேபிள் நடைமுறைகள் அதாவது உணவுப் பொருள் பெயர், தயாரிப்பு தேதி, முடிவு தேதி, தயாரிப்பு முகவரி, உணவு பாதுகாப்பு உரிம எண் உள்ளிட்ட லேபிள் நடைமுறைகள் உள்ள னவா என முகவரி முறையாக கண்காணித்து உரிய முறையில் அடுக்கி வைத்தல் வேண்டும்.
மேலும் இருப்பு ஸ்டோரேஜ் அறைகளில் பூச்சிகளை கட்டுப்படுத்துதல், கிருமிகள் உட்புகுதலை தடுத்தல் குறித்தும் தெளிவாக விளக்கப்பட்டது.
மேலும், உணவு பொருட்களில் வீட்டளவில் கலப்படம் கண்டறிதல் குறித்தும் நேரடியாக தேயிலை, தேன், பால், நெய், சமையல் எண்ணெய் உள்ளிட்டவற்றில் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
அனைத்து உணவு வணிகர்களும் முறையாக உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு பெற்று, புதுப்பித்து அதை காட்சிப்படுத்த வேண்டும். மேலும் விநியோகிப்பாளர்கள் தங்கள் அளிக்கும் பில்களில் உணவு பாதுகாப்பு உரிம எண் அச்சிடுதல் வேண்டும் அவசியம் என விளக்கப்பட்டது.
தங்கள் கையிருப்பில் காலாவதி பொருள் கள் இருந்தால் தனியாக வைத்து உரிய முறையில் தனிமைப்படுத்தி முறையாக திருப்பி அனுப்புதல் வேண்டும் என்ன விழிப்புணர்வு செய்யப்பட்டது.
உணவு பாதுகாப்புத்துறை அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி பார்ட்னர் குளோபல்’ பயிற்றுனர் அருண் மற்றும் நுகர்வோர் தயாரிப்பு விநியோகிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



