fbpx
Homeபிற செய்திகள்உணவு பாதுகாப்பு உரிமம், பதிவுச் சான்றுகளை வணிகர்கள் ஆன்லைனில் புதுப்பிக்கலாம்: கோவை மாவட்ட ஆட்சியர்

உணவு பாதுகாப்பு உரிமம், பதிவுச் சான்றுகளை வணிகர்கள் ஆன்லைனில் புதுப்பிக்கலாம்: கோவை மாவட்ட ஆட்சியர்

உணவுப் பாதுகாப்பு மற்றும் உரிமம் மற்றும் பதிவு சான்று புதுப்பிக்க (Renewal)உணவு வணிகர்கள் தாங்களாகவே ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்.

அவ்வாறு செய்ய இயலாதவர்கள் பொது சேவை மையம் மற்றும் FSSAI ஆல் அங்கீகரிக்கப்பட்ட Food Safety Mitra என்ற சேவை மையத்தை தொடர்பு கொண்டும் உரிமம்/பதிவு விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம் இது குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார்பாடி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், உணவு பாதுகாப்பு உரிமம் பெறும் நடைமுறையை எளிமைப்படுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த புதிய அறிவிப்பின்படி, உணவுப் பாதுகாப்பு உரிமம் (License) பெற வேண்டி ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்பவர்கள் முதல் கட்டமாக ரூ.1000/- மட்டும் விண்ணப்பத்துடன் செலுத்த வேண்டும்.

அத்தகைய ஆன்லைன் விண்ணப்பங்கள் ஆய்வுக்கு பின் அங்கீகரிக்கப்பட்டால் உரிமத் தொகையின் மீதி தொகையை செலுத்துவதன் பேரில் உணவுப் பாதுகாப்பு உரிமத்தை ஆன்லைன் மூலம் தாங்களாகவே தங்களது மின்னஞ்சல் முகவரியின் (Mail Id) மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

ஆனால் மின்னஞ்சல் முகவரி தவறாக இருப்பின் உணவு பாதுகாப்புத் துறையின் இணைய தளத்தில் அதாவது தாங்கள் ஏற்கெனவே விண்ணப்பித்த இணைய தள முகவரியில் சென்று உள் நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்று (Login Credential)-ல் Dash Board-™issued என்கிற இடத்தில் கிளிக் செய்து சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எனவே உரிமச் சான்று மற்றும் பதிவு சான்றை பெற மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி தாங்களாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன் பின்னர் FSSAI-ஆல் அங்கீகரிக்கபட்ட ஆன்லைன் விண்ணப்பத்திற்கு உணவு வணிகர்கள் 30 நாட்களுக்குள் மீதி தொகையினை செலுத்தத்தவ றினால் அவர்களது விண்ணப்பம் தானாகவே ரத்தாகிவிடும்.

மேலும் பழைய நடைமுறையில் உணவுப் பாதுகாப்பு உரிமம் 30 நாட்களுக்கு முன்பாக ஆன்லைன் மூலம் புதுப்பிக்க நாள் ஓன்றுக்கு ரூ.100/- என அபராதம் இதுவரை விதிக்கப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது புதிய நடைமுறையில் 30 நாட்களுக்கு முன்னர் ஆன்லைன் மூலம் புதுப்பிக்கத் தவறினால் விதிக்கப்படும் அபராதம் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது உள்ள புதிய நடைமுறையில் உணவுப் பாது காப்பு உரிமம் புதுப்பித்தல் ஓராண் டுக்கு மட்டுமே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இயலும்.

ஏற்கனவே உள்ள நடைமுறை யின்படி உணவுப் பாதுகாப்பு பதிவு சான்று மட்டும் ஆன்லைன் மூலம் புதிதாக பெறும்போதும் மற்றும் புதுப்பிக்கும்போதும் உணவு வணிகர்கள் தங்கள் விருப்பதிற்கேற்ப ஓராண்டு முதல் ஐந்தாண்டுகள் வரை பதிவு சான்று ஆண்டு ஒன்றுக்கு ரூ.100/- என ஐந்தாண்டு வரையில் ரூ.500/- வரை செலுத்தி தங்களாகவே ஆன்லைன் மூலம் மேற்கூறிய முறையில் பெற்று கொள்ளலாம்.

ஆனால் பதிவு சான்றை பொறுத் தவரையில் புதுப்பித்தல் என்பது ஒன்று முதல் ஐந்தாண்டு வரை என ஏற்கனவே இருந்த முறையே தொடர்கிறது.
உணவுப் பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வாய்ப்பு காலாவதியாகும் நாளிலிருந்து (180 நாட்கள்) ஆறு மாதங்கள் முன்பிலிருந்து ஆன்லைன் மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம்.

ஆனால் புதுப்பிக்கப்படாமல் காலாவதியாகும் உரிமம்/பதிவு சான்று மீண்டும் புதுப்பிக்க 90 நாட்களுக்குள் உரிமத் தொகையில் 3 மடங்கு அபராத கட்டணமும், 180 நாட்களுக்குள் புதுப்பிக்க ஐந்து மடங்கு அபராத கட்டணமும் செலுத்தி ஆன்லைன் மூலம் ஏற்கெனவே மேற்கூறிய முறையில் புதுப்பித்துக் கொள்ளலாம்.

எனவும் அவ்வாறு செய்ய இயலாதவர்கள் பொது சேவை மையம் மற்றும் FSSAI ஆல் அங்கீ கரிக்கப்பட்ட Food Safety Mitra என்ற சேவை மையத்தை தொடர்பு கொண்டும் உரிமம்/பதிவு விண் ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் FSSAI அங்கீகரிக்கப்பட்ட https://mitra.fssai.gov.in/ என்ற இணையதளத்தில் கோவை மாவட்டத்தின் mitra சேவை மையங்களின் மின்னஞ்சல் மற்றும் அலைபேசி எண்களையும் தொடர்பு கொண்டு உரிமம் மற்றும் பதிவு சான்று விபரத்தினை பதிவு செய்து கொள்ளலாம்.

அவ்வாறு ஆன்லைனில் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யப்படும் போது அவ்விண்ணப்பத்திற்கான சேவை கட்டணம் மற்றும் உரிமம்/பதிவு சான்றிற்கான நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தாங்கள் அறிந்தால் 0422-2220922 என்ற எண்ணிற்கும் 93616 38703 என்ற அலை பேசி எண்ணிற்கும் தொடர்பு கொண்டு புகாரினைத் தெரிவிக்கலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img