fbpx
Homeபிற செய்திகள்மேட்டுப்பாளையத்தில் 2.41 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள்

மேட்டுப்பாளையத்தில் 2.41 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள்

மக்களவைத்தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் விநியோகத்தை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பறக்கும் படை அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெள்ளாதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் ஜடையம்பாளையத்தை சேர்ந்த ரேவதியிடம் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப் பட்ட ரூ.62 ஆயிரம்,காரமடை அருகே உள்ள சீலியூரில் நடைபெற்ற வாகன சோதனையில் கோவை இடையர்பாளையத்தைச்சேர்ந்த கனகராஜி டம் ரூ.54,000, சின்னமத்தம்பாளையத்தில் நடந்த சோதனையில் வீரபாண்டி பிரிவைச்சேர்ந்த அஜித் குமார் என்பவரிடமிருந்து ரூ.75 ஆயிரம் மற்றும் தென் திருப்பதி நால்ரோடு பகுதியில் நடைபெற்ற சோதனையில் வெள்ளியங்காடு பகுதியைச்சேர்ந்த வினோத் குமார் என்பவரிடமிருந்து ரூ.50,000 உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்வது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பின், பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2.41 லட்சம் ரொக்கப்பணத்தை மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

படிக்க வேண்டும்

spot_img