சக்தி குழுமம் மற்றும் கோவை – ரோட்டரி சங்கம் ஆகிய நிறுவனங்கள் பொள்ளாச்சி, மணக்கடவு வாணவராயர் வேளாண்மை கல்வி நிறுவனத்துடன் இணைந்து கடந்த 20ம் தேதி முதல் 33 வகையான வீட்டு உபயோக பொருட்கள் அடங்கிய நிவாரண பெட்டிகள் தினமும் 1000 பெட்டிகள் வீதம் இன்று வரை 3350 நிவாரண பெட்டிகளை வெள்ளம் பாதித்த பகுதியான தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய 3 மாவட்டங்களில் ஆற்றின் ஓரம் மற்றும் மலை வாழ் மக்கள் வசிக்கும் சுமார் 10க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு நேரடியாக கோவை குமரகுரு தொழில் நுட்ப கல்லூரி தன்னார்வ மாணவர்கள் சுமார் 300 பேர்களின் உதவியுடன் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிவாரண பொருட்கள் அனைத்தும் மணக்கடவு வாணவரா யர் வேளாண்மை கல்வி நிறுவன தாளாளர் கற்பகவல்லி ராஜ்குமார் தலைமையில், கல்லூரி முதல்வர் பிரபாகர், கல்லூரி இயக்குநர் கெம்புசெட்டி, ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள், மாணவர்கள் உதவியுடன் தயார் செய்து அனுப்பப்பட்டு வருகிறது.