தர்மபுரியில் இருந்து தூத்துக்குடிக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்களை கலெக்டர் அனுப்பி வைத்தார்.
தென்மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென் காசி மாவட்டத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
வெள்ளப்பெருக்கு பாதிப்பில் இருந்து இம்மாவட்ட மக்கள் படிப்படியாக தற்போது மீண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ளநி வாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் நேற்று முன்தினம் தர்மபுரி பச்சமுத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் சசிஞானோதயா கல்வி நிறுவனங்கள் சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட பகுதிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொ ருட்களை மாவட்ட கலெக் டர் சாந்தி, கலெக்டர் அலு வலகத்தில் இருந்து அனுப்பி வைத்தார்.
நிகழ்ச்சியில் பச்சமுத்து கல்வி நிறுவ னங்களின் தலைவர் பாஸ் கர், துணைத்தலைவர் சங் கீத்குமார் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்சி ராஜ்குமார் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.