fbpx
Homeபிற செய்திகள்காவிரி நதியில் தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் காவிரி அன்னைக்கு வழிபாடு

காவிரி நதியில் தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் காவிரி அன்னைக்கு வழிபாடு

தஞ்சாவூர் அருகே திருவையாறு புஷ்ய மண் டபம் படித்துறை அருகே காவிரி நதியில் தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் காவிரி அன்னைக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர்.
“இதில், காவிரி ஆற்றில் காவிரித்தாய் என்ற எழுத்து வடிவில் மாப்பிள்ளை சம்பா நாற்று நட்டு வைக்கப்பட்டது.

மேலும், காவிரித்தாய் படத்துக்கு பூஜைகள், தீபாராதனைகள் செய்து, காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டி சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மருத்துவர் ராதிகா மைக் கேல் தலைமை ஏற்று வழி பாடுகளை துவக்கி வைத்தார்.

காவிரித்தாய் சிறப்பு பூஜை வழிபாடு நிகழ்ச்சிகளை காவேரி இயற்கை வேளாண் நடுவம் நிறுவனர் தங்கராசு, காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ஏ கே ஆர் ரவிச்சந்தர், தமிழக வாழ்வு ரிமை இயக்கம் தலைவர் எம் ரவிச்சந்திரன், ஆகி யோர் ஏற்பாடு செய்து முன்னிலை வைத்தார்கள்

தஞ்சை நெற்களஞ்சிய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் விவசாயிகள் திரளாக பங் கேற்றார்கள்.

படிக்க வேண்டும்

spot_img