fbpx
Homeபிற செய்திகள்யூத் ஹாஸ்டெல்ஸ் சார்பில் சர்வதேச குழந்தைகள் தின விழா

யூத் ஹாஸ்டெல்ஸ் சார்பில் சர்வதேச குழந்தைகள் தின விழா

  யூத் ஹாஸ்டெல்ஸ் அஸோசியேஷன் ஆப் இந்தியா கொங்கு கிளையின் பவளவிழா ஆண்டின் இருபத்தைந்தாவது  நிகழ்வாக சர்வதேச குழந்தைகள், மாணவர்கள் மற்றும் ஆண்கள் தின விழா என முப்பெரும் விழா ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளியில்  தலைமையாசிரியர்  ரவிராசு தலைமையில் நடந்தது. 

ஹாஸ்டெல்ஸ் மாநில துணைத் தலைவர் டாக்டர். ராஜா, சேர்மன் டாக்டர். ஐயப்பன், துணைத் தலைவர் சுகுமார், கிளை தலைவர் சந்திரா தங்கவேல் பரிசுகளையும் மற்றும் இசைப்பள்ளி மாணவன் சல்மானுக்கு இலவசமாக வயலின் ஒன்றும் வழங்கினர்.

முன்னாள் தலைமையாசிரியை கங்காநாயுடு, ஆசிரியர்கள் சங்கரன், குமார், விஜயா, வேல்முருகன், ஞானப்பிரகாசம் வாழ்த்துரை வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img