சித்தோடு அரசு உதவி பெறும் ஸ்ரீ வாசவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 25 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற உடற்கல்வி இயக்குநர் எஸ் ரமேஷ்க்கு கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரியாவிடை விழாவில், பிரமுகர்கள் பலர் பாராட்டு தெரிவித்தனர்.
கல்லூரி செயலாளர் சதாசிவம், தலைவர் சிவக்குமார், முதல்வர் தாமரைக்கண்ணன், முன்னாள் எம்எல்ஏக்கள் கே.எஸ்.தென்னரசு, விடியல் சேகர், வேளாளர் கல்லூரி தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், ஸ்ரீ முதுபாறை அம்மா சுவாமிகள், ஸ்ரீ செந்தில் சுவாமிகள், விவிசிஆர் பள்ளி தாளாளர் கணேசன், ஈரோடு சதுரங்க வட்ட தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஷ்குமார், ஓய்வு பெற்ற டிஎஸ்ஓக்கள் சௌந்தர், நஞ்சப்பன், ராஜசேகர், கவுன்சிலர் ஆதி ஸ்ரீதர் உள்ளிட்ட பலர், ரமேஷ் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஆற்றிய பல்வேறு சேவைகளை எடுத்துரைத்து அவரைப் பாராட்டினர்.