இம்பா அமைப்பின் சார்பில் ஈரோடு டெக்ஸ் வேலியில் 3 நாள் தொழில் வர்த்தக கண்காட்சியை மலேசியா நாட்டின் கவுன்சில் ஜெனரல் சரவணகுமார் துவக்கி வைத்தார்.
இம்பா அமைப்பின் நிறுவனத் தலைவர் டாக்டர் அருணாச்சலம் முதலியார் தலைமை வகித்தார்.
புகழ்பெற்ற மருத்துவமனைகள், கல்லூரிகள், முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த கண்காட் சியில் 225 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
சுமார் 150 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த துவக்க விழா நிகழ்ச்சியில் முத்துசாமி, ராஜன், சபாநாயகம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.