ஈரோட்டில் பிறந்து நாசாவின் புவி கோள ஆய்வக தலைமை விஞ்ஞானியாக பணியாற்றி வரும் மூத்த விஞ்ஞானி கஸ்தூரி வெங்கடேஸ்வரன் ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வருகை தந்தார். இஸ்ரோ விஞ்ஞானி பெ.சசிகுமார் உடன் வந்திருந்தார்.
கஸ்தூரி வெங்கடேஸ்வரன் அவரது “வாழ்க்கை வரலாற்று” நூலும், அவரோடு நுண்ணுயிர்கள் பற்றிய கலந்துரையாடல் வழியாக விஞ்ஞானி சசிகுமார் எழுதிய “தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான” ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் நூல்கள் குறித்து உரையாற்றினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் இரா.சங்கரசுப்பிரமணியன், விலங்கியல் துறை தலைவர் சித்ரா,
கல்லூரியின் இயக்குநர் முனைவர் இரா.வெங்கடாச்சலம், பொருளியல் துறை தலைவர் மணி உரை ஆற்றினர்.