ஈரோடு அரசு பொது மருத்துவமனையில் ரூ.67.02 கோடி மதிப்பிலான எட்டு அடுக்கு பல்நோக்கு உயர் சிறப்பு சிகிச்சை பிரிவு கட்டிடத்தை பொள்ளாச்சியில் புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆன்லைன் மூலம் திறந்து வைத்தார்.
ஈரோடு மாவட்டத்திற்கு அவரின் புதிய அறிவிப்புகள்: ஈரோடு சோலார் பகுதியில் ரூ.20 கோடியில் ஒருங்கிணைந்த காய்கறி மற்றும் மளிகைச் சந்தை, ரூ.6 கோடியில் நூலகம், வ.உ.சி பூங்காவில் ரூ.15 கோடியில் மேம்பாட்டுப் பணிகள், காவிரியில் ரூ.30 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ரூ.5 கோடியில் அந்தியூர் பர்கூர் மலைக்கு 8 சமுதாயக் கூடம் மற்றும் சாலை பணிகள் சத்தியமங்கலத்தில் ரூ.20 கோடியில் குடிநீர்த் திட்டம், ரூ.10 கோடியில் கொடுமணல் அகழாய்வுப் பொருட்களுக்கு அருங்காட்சியகம் குளிர்சாதன வசதி உடன் கூடிய மஞ்சள் பாதுகாப்பு மையம்.
விழாவில் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, மேயர் நாகரத்தினம் சுப்ரமணியம் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.