fbpx
Homeபிற செய்திகள்ஈரோட்டின் வளர்ச்சிக்காகவே எனது பொதுவாழ்வு இருக்கும் திமுக வேட்பாளர் பிரகாஷ் இறுதிகட்ட பிரசாரம்

ஈரோட்டின் வளர்ச்சிக்காகவே எனது பொதுவாழ்வு இருக்கும் திமுக வேட்பாளர் பிரகாஷ் இறுதிகட்ட பிரசாரம்

ஈரோட்டின் வளர்ச்சியை மையப்படுத்தியே எனது பொதுவாழ்வு அமைந்திருக்கும் என்று திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் உருவாக்கமாக பேசினார்.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே. இ.பிரகாஷ் பிரசார கடைசி நாளான நேற்று ஈரோட்டில் சட்டமன்ற தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அவர் பேசியதாவது: ஈரோடு நாடாளுமன்ற தொகுதியின் வளர்ச்சி, மக்கள் நலன் ஆகியவற்றை மையப்படுத்தியே எனது பொதுவாழ்வு இருக்கும். எந்த நேரத்திலும் என் னை மக்கள் எளிதில் அணுகலாம்.

உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மக்கள் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் உங்களில் ஒருவனாக இருந்து உங்களுக்காக உழைப்பேன். இவ்வாறு பேசினார்.

படிக்க வேண்டும்

spot_img