ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் தனலட்சுமி மற்றும் தலைமை பொறியாளர் விஜயகுமார் ஆகியோர் நகரில் உள்ள வர்த்தக சங்க பிரதிநிதிகளின் கூட்டத்தை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடத்தினர்.
மாநகராட்சி நடை பாதைகள், தெருக்களை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்யாமலும் போக்குவரத்துக்கு இடையூறு இன்றி வர்த்தகம் செய்யுமாறும் தங்களது கடை வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளை தமிழில் வைக்குமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.
வர்த்தக சங்க நிர்வாகிகள் வி.கே.ராஜமாணிக்கம், ரவிச்சந்திரன், சண்முகவேல், ராமச்சந்திரன், லாரன்ஸ், ரமேஷ், நூர் சேட் உட்பட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.



