fbpx
Homeபிற செய்திகள்அனைவரும் வாக்களிக்க வழக்கறிஞர்கள் சங்கம் பிரசாரம்

அனைவரும் வாக்களிக்க வழக்கறிஞர்கள் சங்கம் பிரசாரம்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை முன்னெடுக்க இருப்பதாக வழக்கறிஞர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. மாநில தலைவர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வழக்கறிஞர்கள் நலன் சார்ந்த விவரங்கள் பகிரப்பட்டது. மேலும் வழக்கறிஞர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டி வலியுறுத்தப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், வரும் காலங்களில் சங்கத்தின் செயல்பாடுகளை விரைவுப டுத்துவது, நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்வது, என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

நடைபெற்ற கூட்டத்தில் சங்கத்தின் மாநில செயலாளர் பாபு, தேசிய செயற்குழு உறுப்பினர் பழனிகுமார், ஈரோடு மாவட்ட தலைவர் மனோகரன் மற்றும் செயலாளர் ராஜேஷ்குமார் உள் பட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img