ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு மருத்துவமனையின் சேர்மேன் டாக்டர் தங்கவேல் தலைமை தாங்கினார். ஐஎம்ஏ முன்னாள் மாநில தலைவர் டாக்டர் சி.என்.ராஜா, ஐஎம்ஏ முன்னாள் மாவட்ட தலைவர் செந்தில்வேலு, ஐஎம்ஏ பொருளாளர் டாக்டர் நந்தகுமார், டாக்டர் சித்ரா சௌந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
நிகழ்ச்சியில், அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரு பவர்களுக்கு, சிறுநீரகம் தானம் வழங்கியஅவர்களது குடும்ப உறுப்பினர்களான பெண்களை பாராட்டி, நினைவு பரிசு வழங்கி கவுரப்படுத்தப்பட்டனர்.
தொடர்ந்து, சிறுநீரக பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வு கையேட்டினை அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும், ஐஎம்ஏ ஈரோடு தலைவருமான டாக்டர் சரவணன் வெளியிட்டார்.
ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் திருமலை அழகன் பங்கேற்று மகளிரை பெருமைப்படுத்தி பேசினார். இந்நிகழ்ச்சியில், அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையின் இய க்குநர் டாக்டர் பூர்ணிமா சரவணன், கலாவதி தங்கவேல் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.