தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 41&வது வணிகர் தின விடுதலை முழக்க மாநாடு மதுரையில் வருகிற 5&ந் தேதி நடைபெறுகிறது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கி பேசினார். மாவட்ட செயலாளர் லாலா கணேசன் வரவேற்று பேசினார்.
மாநில துணைத்தலைவர் பாலநாகமாணிக்கம், மாநகர தலைவர் ஜான் வல்தாரிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆலோசகர்கள் துரைசாமி, அண்ணாதுரை, முத்துக்குமரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டு பேசினார்.
இதன் பின்னர் விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:&
ஆன்லைன் கார்ப்பரேட் நிறுவனங்களால் வணிகர்களுக்கு இடர்பாடு ஏற்பட்டுள்ளது. வணிகர்களை பாதுகாக்க அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வணிகர்கள், வியாபாரிகளிடம் மட்டுமே பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. வருகிற 2ந் தேதி இது தொடர்பாக தேர்தல் ஆணையரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம்.
இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் தேர்தல் நாளான வருகிற 19ந் தேதி வரை தமிழகம் முழுவதும் அனைத்து மளிகை கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப்படும். என்றார். முடிவில் பொருளாளர் அசோகன் நன்றி கூறினார். மாவட்ட துணைத்தலைவர்கள் தங்கமணி, தனசேகர், வி.ஜி.வி. காந்தி மற்றும் பலர் கலந்துகொண்டன