இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை முதன்மை தேர்தல் அலுவலர் ஆகியோரது அறிவுரைகளின்படி, நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுய உதவிக்குழுக்கள் மூலம் கோலப்போட்டி நடத்த அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 14 வட்டாரங்களைச் சேர்ந்த சுய உதவிக்குழுக்கள் பங்கேற்று வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் கோலமிடப்பட்டதை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டார்.
இப்போட்டியில் தேர்ந் தெடுக்கப்படும் நபர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.4 ஆயிரம். 3-ம் பரிசாக ரூ.3 ஆயிரம் மற்றும் சான்றிதழ்கள் தேசிய வாக்காளர் தினத்தன்று வழங்கப்படும்.
மேலும், மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும் மற்றும் சிறந்த 7 பேருக்கு தலா ரூ.100 வழங்கப்படும் மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கலாம். மாநில அளவில் தேர்ந் தெடுக்கப்படுவர்களுக்கு சான்றிதழுடன் முதல் பரிசாக ரூ.25 ஆயிரம். 2-ம் பரிசாகரூ.15 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.
மேலும் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்படும் மற்ற சிறந்த 7 பேருக்கு தலா ரூ.9 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகதீஸ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.