fbpx
Homeபிற செய்திகள்கம்பத்தில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி

கம்பத்தில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி

மக்களவைத் தேர்தலையொட்டி தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவின் பேரில் கம்பம் நகராட்சி மற்றும் மகளிர் திட்டம் இணைந்து கம்பத்தில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

கம்பம் நகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய பேரணியை ஆணையாளர் வாசுதேவன், கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இது அரசு மருத்துவமனை, பத்திரப்பதிவு அலுவலகம், வஉசி திடல், காந்தி சிலை வழியாக அரசமரம் பகுதியை வந்தடைந்தது.

நிகழ்சியில் நகராட்சி பொறியாளர் அய்யனார், மேலாளர் ஜெயந்தி, உதவி பொறியாளர் சந்தோஷ், சுகாதார அலுவலர் சக்திவேல், மகளிர் திட்டம் உதவி திட்ட அலுவலர்கள் கங்காகௌரி, சுந்தரமூர்த்தி, சமுதாய அமைப்பாளர்கள் ரஞ்சிதம், குணசுந்தரி மற்றும் மகளிர் சுயஉதவி குழுவினர், பெண்கள் ஏராளமானவர் கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரும் தேர்தல் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img