கடலூர் மாவட்டத்தில் 227 மாணவர்களுக்கு ரூ.8.25 கோடி கடன் உதவியை கலெக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி சார்பில் கல்வி கடன் வழங்கும் முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் அருண்தன்புராஜ் தலைமை தாங்கி 227 மாணவர்களுக்கு ரூ.8 கோடியே 29 லட்சம் கல்விக்கடன் உதவிகளை வழங்கினார்.
மேலும் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மாணவர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் கல்விக் கடன் திட்டத்தில் ஒரு மாணவருக்கு பல் மருத்துவப்படிப்புக்கு மொத்தம் ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி இந்த ஆண்டுக்கான கல்விக் கடன் தொகை ரூபாய் 33 ஆயிரத்து 334க்கான காசோலை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்.
முகாமில் அரசு திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில் பல்வேறு துறை எங்களின் வாயிலாக அமைக்கப்பட்டிருந்த அரங்கங்களும் கலெக்டர் பார்வையிட்டார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் கூறுகையில், மாணவர்கள் தங்களது உயர்கல்வி கனவை அடைவதற்கு பொருளாதாரம் ஓரு தடையாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதல்- அமைச்சர் உத்தரவுப்படி மாணவர் களின் கல்வி கனவை நினைவாக்கும் வகையில் கடலூர் மாவட்டத்தில் மாபெரும் கல்வி கடன் முகாம் நடை பெற்றது.
ஏற்கனவே கடலூர் மாவட்டத் தில் 2 கல்வி கடன் வழங்கும் முகாம் நடைபெற்ற நிலையில் தற் போது 3-வது முகம் நடக்கிறது. இந்த முகாம் அனைத்து கல்லூரிகள் மற்றும் வங்கிகளை ஒருங் கிணைந்து நடத்தப்படுகிறது. இந்த கல்விக் கடன் முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கல்விக்கடன் வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த முகாமில் மாணவர்கள் வங்கியாளர்களை அணுகி தங்களுக்கான கல்வி கடன் குறித்து முழு தகவலையும் அறிந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் 8248774852 என்ற வாட்ஸ்-ஆப் எண் மூலமாக அவர்கள் கல்விக்கடன் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்` என்றார்.
முன்னதாக கல்வி கடன் பெற விண்ணப்பித்த சில மாணவர்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத வங்கி அதிகாரிகளை கலெக்டர் கண்டித்தார். முகாமில் சுந்தரிராஜா, துணைமேயர் தாமரைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகர், துணை மண்டல மேலாளர் பாலமுருகன் முன்னோடி வங்கி மேலாளர் அசோக் ராஜா கோட்டாட்சியர் அபிநயா மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள் வங்கியாளர்கள் கலந்து கொண்டனர்.