பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி நிறுவி பல்லாயிரக்கணக்கான மாணவர்களை கல்வி கற்க வைத்த பி.கே.மூக்கையா தேவர் 46வது நினைவு தினத்தை முன்னிட்டு தேசிய முக்குலத்தோர் கழகம் மற்றும் தேவர் மக்கள் நல அறக்கட்டளை நிறுவனத் தலைவர் டெல்டா சுரேஷ் தேவர் ஆலோசனைப்படி தலைமை அலுவலகமான கோவை ஏபிடி ரோடு சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட் டது.
இந்த நிகழ்வில் மாநிலச் செயலாளர் தனசேகர், மாநில இளைஞர் அணி செயலாளர் அழகுராஜா, மாநில தொழிற்சங்க செயலாளர் ரவி, மாநில தொழிற்சங்க தலைவர் வினோத், மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் ஜனா, மாநில துணைச் செயலாளர் சின்னசாமி மற்றும் மகளிர் அணியினர் மாநிலச் செயலாளர் வித்திய பாரதி, பொருளாளர் கோவிந்தம்மாள், மாவட்ட செயலாளர் முத்துலட்சுமி, மாணவரணி தலைவர் வாசுமலை, துணைச் செயலாளர் பிருந்தா வினித், ஒருங்கிணைப்பாளர் திலகவதி, நிர்வாகிகள் மலைச்சாமி, கண்ணன், வில்சன், சதீஷ் ,கோபி, சின்னத்துரை, செல்வா, வேளாங்கண்ணி, அஜித், வீரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



