fbpx
Homeபிற செய்திகள்ஆட்சி அதிகாரத்திற்கு ஆசைப்பட்டிருந்தால் பாஜகவில் அதிமுக நீடித்து இருக்கும்: காரமடையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

ஆட்சி அதிகாரத்திற்கு ஆசைப்பட்டிருந்தால் பாஜகவில் அதிமுக நீடித்து இருக்கும்: காரமடையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

நீலகிரி தொகுதி அதிமுக வேட்பா ளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனை ஆதரித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காரமடையில் உள்ள திடலில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

அதிமுகவை பொறுத்தவரை பொன் விழா கண்ட கட்சி. இந்தியாவில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்க முக்கிய காரணம் அதிமுக தான். திமுக-காங்கிரஸ் தலைமையிலான அரசு தான் நீட் தேர்வை கொண்டு வந்தது. அதை தடுத்த நிறுத்த பாடுபடுவது அதிமுக தான்.
பொய்யை திரும்ப,திரும்ப பேசி திமுக உண்மையாக்க பார்க்கின்றார் கள். தமிழகத்தில் தற்போது அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலை விரித்தாடுகிறது.

லஞ்சம் வாங்கும் திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட இந்த தேர்தல் தான் சரியானது. இந்த முறை திமுகவை வெற்றி பெற செய்தால் தமிழக மக்களை யாராலும் காப்பாத்த முடியாது.
திமுகவில் வாரிசு அரசியலை தடுக்க இந்த தேர்தலில் அவர்களை தோற்கடிக்க வேண்டும். திமுக முதல்வர் ஸ்டாலின் பொம்மை முதல்வராக செயல்பட்டு வருகிறார். வாரிசு அரசியலில் அவரது மகனை முதல்வராக்க பார்த்து வருகிறார்.

இரட்டை வேடம் போடும் ஒரே கட்சி தமிழகத்தில் திமுக தான். இந்தியா கூட்டணிக்கு யார் பிரதமர் என்று அறிவிக்க முடியாது. சிறுபான்மையினர் வாக்குகள் பெற இந்தியா கூட்டணி தேவைப்படுகிறது. ஸ்டாலின் கேட்டுக்கொள்ளுங்கள். அதிமுக ஆட்சி அதிகாரத்திற்கு ஆசைப்பட்டது கிடையாது. தமிழக மக்களுக்கு தேவையான நிதியை நாடாளுமன்றத்தில் பேசி வாங்கி தர வேண்டும்.
ஆட்சி அதிகாரத்திற்கு ஆசைப்பட்டிருந்தால் பாஜகவில் அதிமுக நீடித்து இருக்கும். அம்மா சொன்னது போல் 100 ஆண்டு காலம் அதிமுக இருக்கும். அதிமுகவில் இருந்த எட்டப்பன்கள் தற்போது காணாமல் போய்விட்டனர்.

திமுக தேர்தல் அறிக்கையில் 520 அறிவிப்பு வெளியிட்டனர். ஆனால், எதுவும் நிறைவேற்றவில்லை. இதில் படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை ஏமாறுகின்றனர். விலை வாசி உயர்வால் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.

அதிமுக ஆட்சியில் ரூ.10,000 இருந்தால் குடும்பம் நடத்தலாம். ஆனால், திமுக ஆட்சி காலத்தில் மளிகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் ரூ.14,000 வரை தேவைப்படுகிறது.
ரூ.1,000 கொடுத்ததாக பேசி வரு கிறார் ஸ்டாலின். அவர் பணத்தை தரவில்லை. மக்கள் வரிப்பணத்தை தருகிறார். மக்கள் மீது கடனை சுமத்தி வருகிறார். திமுக விற்கு இந்த தேர்தல் தான் கடைசி.அவர்கள் வீட் டிற்கு செல்ல தயாராக உள்ளனர். திமுகவிற்கு மக்கள் வாக்களித்து புலம்பி வருகின்றனர். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்எல் ஏக்கள் பி.ஆர்.ஜி.அருண் குமார், ஏ.கே.செல்வராஜ், தனபால், அமுல் கந்தசாமி, பண்ணாரி, முன்னாள் எம்ஏல்ஏக்கள் ஓ.கே.சின்னராஜ், கருப்பசாமி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாசர், நகர செய லாளர் வான்மதி சேட்,உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img