fbpx
Homeபிற செய்திகள்டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் ரெட்டிகான் 2024 தேசிய கருத்தரங்கு

டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் ரெட்டிகான் 2024 தேசிய கருத்தரங்கு

டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் விழித்திரை துறை சார்பில் ரெட்டிகான் 2024 தேசிய கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. 14-வது பதிப்பாக நடைபெற்ற இந்நிகழ்வு, இந்தியாவில் பார்வையின்மைக்கு ஒரு முக்கியமான காரணமாக இருக்கும் விழித்திரை கோளாறுகளை சரிசெய்ய மிக நவீன உத்திகள், தொழில்நுட்பங்கள் மற்றும் சிகிச்சை முறையியல்கள் குறித்து விவாதித்தது.

இதில், விழித்திரை அறுவைசிகிச்சை தொடர்பாக மிக சமீபத்திய முன்னேற் றங்கள் குறித்த செயல்முறை விளக்கங்களும் இடம்பெற்றன. மொரீஷியஸ் குடியரசின் கௌரவத் தூதர் மலையப்பன் நாகலிங்கம், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் விட்ரியோ – ரெட்டினல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக் டர்.அஸார் அகர்வால் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இயக்குநர் டாக்டர். ஜே.சங்குமணி இக்கருத்தரங்கு நிகழ்வை தொடங்கி வைத்தார்.

இந்தியாவிலிருந்தும் மற்றும் வெளி நாடுகளிலிருந்தும் விழித்திரை சிறப்பு நிபுணர்கள் மற்றும் கண் மருத்துவர்கள் உட்பட, 1500 பேர் நிகழ்வில் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img