fbpx
Homeபிற செய்திகள்கோவை தொகுதியில் மோடியே போட்டியிட்டாலும் திமுக வெற்றி பெறும் - அமைச்சர் சாமிநாதன் பேட்டி

கோவை தொகுதியில் மோடியே போட்டியிட்டாலும் திமுக வெற்றி பெறும் – அமைச்சர் சாமிநாதன் பேட்டி

திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியில் உள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் ஈரோடு மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிமுக கூட்டம் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. 

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த ஆலோசனை கூட்டத்தில், ஈரோடு மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்வது மற்றும் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ள பிரச்சார பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கூறுகையில்,

“பொள்ளாச்சி , ஈரோடு மட்டுமல்லாது 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் பிரதமரை தேர்ந்தெடுக்கக்கூடிய சக்தியாக திகழ்வார்கள். மக்கள் விரும்பக்கூடிய, மக்களை மதிக்கக் கூடிய, மத்திய அரசாக  மத்தியில் அமைய இருக்கிறது.   கோவை தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி வந்து போட்டியிட்டாலும் கூட அங்கும் திமுக வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img