fbpx
Homeபிற செய்திகள்கோவையில் நடந்த திமுக மாநில மாணவரணி ஆலோசனை கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றம்: ஆ.ராசா எம்பி...

கோவையில் நடந்த திமுக மாநில மாணவரணி ஆலோசனை கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றம்: ஆ.ராசா எம்பி சிறப்புரை ஆற்றினார்

திமுக மாணவரணி மாவட்ட, மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் கோவை காளப்பட்டியில் உள்ள சுகுணா கலையரங்கத்தில் நடைபெற்றது. மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். மாணவரணி மாநில துணைச் செயலாளர் வி.ஜி.கோகுல் வரவேற்பு ரையாற்றினார். நடைபெற்ற இந்த ஆலோசனைக்கூட்டத்தில்,
இளைஞரணி மாநாட்டில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முன்மொழிந்து நிறைவேற்றிய “மாநில உரிமை மீட்பு” தீர்மா னங்களை தமிழகம் முழுவதும் பட்டிதொட்டியெல்லாம் கொண்டு செல்வது.

இளைஞரணி மாநாட்டில், தொடக்க உரை வழங்கும் பெருமையை மாணவர் அணிக்கு வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வது, கழக மாணவரணியினர் கருத்தியல் வலிமைமிக்கவர்களாய் விளங்கிட, கருத்தியல் பயிலரங்கம் நடத்த அனுமதி வழங்கிய கழக தலைவர் மற்றும் கழக்இளைஞரணி செயலாளர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வது, டெல்லியில் கழக இளைஞரணி செயலாளர் வழிகாட்டுதலோடு “யுனைடெட் ஸ்டூடென்ஸ் ஆஃப் இந்தியா” என்ற மாணவர் கூட்டமைப்பு சார்பில், தேசிய கல்வி கொள்கை 2020 மற்றும் அதை கொண்டு வந்த பாசிச பாஜக அரசை நிராகரிப்போம். இந்தியாவை காப்போம், கல்வி உரிமையை காப்போம் என்ற முழக்கத்தோடு நாடாளுமன்றம் நோக்கி மாபெரும் மாணவர் பேரணியில் கலந்துகொண்ட மாவட்ட, மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களுக்கு பாராட்டுகள், வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வது, வரும் 1-2-2024 சென்னையில், இந்தியாவை காக்கவும், மாணவர்களின் கல்வி உரிமையை காக்கவும் நடைபெறும் எழுச்சி மிகு மாணவரணி பேரணியில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள பல்வேறு கல்லூரிகளின் திமுக மாணவர்களை சேர்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

“மாணவ நேசன்” – முத்தமிழறிஞர் கலைஞர் 100 பேச்சும் எழுத்தும்“ மாநில அளவிலான பேச்சு மற்றும் கட்டுரைப்போட்டிகள், இறுதி போட்டிகளை பிப்ரவரி மாதத்தில் நடத்துவது. “தமிழ் மாணவர் மன்றம்“ தமிழ்நாடு – புதுவையில் உள்ள கல்லூரிகள் மற்றும் கல்லூரி விடுதிகளில். உருவாக்கிடும் பணியினை விரைவில் துவங்குவது. இட ஒதுக்கீடு முறையை சதி செயல் மூலம் அழிக்க நினைக்கும் யு.ஜி.சி.க்கு திமுக மாணவர் அணியின் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வது என்று 8 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

இதில், கழக துணைப்பொதுச் செயலாளரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ஆ.ராசா எம்பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார், அப்போது அவர் பேசியதாவது:

மாணவரணி தமிழ் சமுதாயத்தை ஒரு அறிவுள்ள சமுதாயமாக ஆக்கும் வேலையை செய்து வருகின்றார்கள். திமுகவின் பொதுக்கூட்டங்கள் மாலை நேர பல்கலைக்கழகங்கள் என அன்று ஒப்புக்கொள்ளப்பட்டது. 1950களில் நடைபெற்ற போராட்டங்கள், வெற்றிகள் அனைத்தையும் கொண்டு வந்து நிறுத்திய அணி மாணவரணி என்பதை எண்ணி பார்க்கிறேன். இந்த வயதில் தான் எதையும் எதிர்பார்க்காத உணர்வு வரும்.

அப்படிப்பட்ட மாணவர்களுக்கு திராவிடம் என்ற பணியை நெஞ்சிலே விதைக்கப்போகின்றீர்கள். அப்படிப்பட்ட மகத்தான பணி மாணவரணி. திமுகவில் மாணவரணி அமைப்பாளர் என்றால் அது ஜில்லா கலெக்டருக்கு சமம், துணை அமைப்பாளர் என்றால் சப் கலெக்டருக்கு சமம். ஆனால் அதற்கான தகுதியை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். நமது பண்பாடு திராவிட பண்பாடு, வரலாற்று சிறப்பு மிக்க தொன்மை மிக்கத்து திருக்குறள். உலகம் சுற்றிக்கொண்டுள்ளது என கூறியது திராவிடம். சுயநலமும், பொதுநலமும் கலந்ததுதான் அரசியல் வாழ்க்கை. உங்களை தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு இந்த மொழிக்கு, இனத்திற்கு எதாவது செய்ய வேண்டும் என கடைசி வரை எண்ணம் இருக்க வேண்டும்.

அப்போது பணியாற்றும்போது உங்களுக்கு வந்து சேரும் பதவி கூடுதல் அடையாளம்.


உங்கள் தனிமனித வாழ்க்கையிலும் என்ன வேண்டுமோ அதையும் செய்ய நாங்கள் தயார்.ஏனென்றால் நீங்கள் ஆரோக்கியமாக, நன்றாக இருந்தால் தான் நீங்கள் உழைக்க முடியும். உங்களையும் பார்த்துக் கொள்ளுங்கள், சமூகத்தை பார்த்துக் கொள்ளுங்கள், தமிழையும் பார்த்துக் கொள்ளுங்கள், திராவிடம் என்றால், சுயமரியாதை , சமத்துவம், மதசார்பின்மை, மாநில சுயாட்சி, இவை 5 ம் திராவிடம் என முதல்வர் தெளிவாக சொல்லியுள்ளார். இந்தியாவில் மட்டும் அல்ல ரஷியாவிலும் சரி இது தான் தத்துவம். சாதி – மதம் இல்லாமல் வாழலாம், வாழ முடியும், வாழ வேண்டும். ஆனால், மொழி இல்லாமல் வாழ முடியாது.

அதுதான் ஒரு இனத்தின் அடையாளம், திராவிடத்தத்துவம் தான் மோடிக்கு எதிராக, இந்தி யாவை காப்பாற்றுகின்ற ஒரு மிகப்பெரிய ஆயுதமாக இருக்கப் போகின்றது என்பதை வட நாட்டில் உள்ள தலைவர்கள் எல்லாம் நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொள்கிறார்கள் அப்படிப்பட்ட தத்துவத்திற்கு சொந்தமான இயக்கத்தின் மாணவரணியின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பெருமிதம் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், கலந்து கொண்ட அனைவருக்கும், “அறிவோம் – திராவிடம்“ நூல் வழங் கப்பட்டது.

மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி, மாணவரணி இணைச்செயலாளர்கள் பூவை ஜெரால்டு, எஸ்.மோகன் மற்றும் துணைச்செயலாளர்கள் மன்னை த.சோழராஜன், ரா.தமிழரசன், அதலை பி.செந்தில்குமார், கா.அமுதரசன், பிஎம்.ஆனந்த், கா.பொன்ராஜ், திருமதி.பூரண சங்கீதா சின்னமுத்து, திருமதி.ஜெ.வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாநிலம் முழுவதும் இருந்து மாணவரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img