திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று ஈரோடு பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ் தெரிவித்தார்.
ஈரோடு மூல கவுண்டன் பாளையம் மாநகராட்சி பள்ளியில் அவர் இன்று வாக்களித்தார். பின்னர் அவர் கூறியதாவது: முதலமைச்சர் ஸ்டாலினின் மக்கள் நலத்திட்டங்கள் பெருமளவு மக்கள் இடையே வரவேற்பு பெற்றுள்ளது. தேர்தல் ஆணையம் மிகச் சிறப்பாக ஏற்பாடுகளை செய்துள்ளது. எந்த இடத்திலும் எந்த பிரச் சினையும் இல்லை. திமுக வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக அனைத்து தொகுதிகளும் உள்ளது.
மக்கள் உற்சாகமாக வாக் களிக்க வந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். அவருடன் ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் மா.சுப்ரமணியம் உட்பட பலர் வந்திருந்தனர்.