fbpx
Homeபிற செய்திகள்திமுக வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகத்தின் முன்பு கடந்த 01.07.2024 முதல் அமலுக்கு வந்துள்ள மூன்று குற்றவியல் சட் டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஒருங்கிணைந்த கோவை மாவட்ட வழக்கறிஞர் அணியினர் ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவை மாநகர மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அன்புச் செழியன் தலைமை தாங்கினார். கழக சட்டத்துறை இணை செயலாளர் கே.எம். தண்டபாணி, கோவை மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் மற்றும் கோவை குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவருமான மருது பாண்டியன், வழக்கறிஞர் அணி .அமைப்பாளர்கள் மருதராஜ், சக்திவேல் பத்ரி (எ)பழனிசாமி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் மணிவேல், விக்ரம் சலாவுதீன், ஆசைத் தம்பி, வெற்றி, ராஜேஷ்குமார், இப்ராஹிம் கோகிலவாணி, மற்றும் கழக வழக்கறிஞர்கள் ஜி டி ராஜேந்திரன், கனகராஜ், ராஜமாணிக்கம், ஆருஸ், எஸ்.ரவிச்சந்திரன், அற்புத ராஜ், மதிவாணன், டி.ரவிச் சந்திரன், சௌந்தர்ராஜன், சந்திரன், தீபக்மது, முத் துக்குமார், ராஜப்பன், ஜி.ராஜன்,மனோகரன், தர்மராஜ், ராஜ்குமார், எஸ்.ஜெயபிரகாஷ், வி.தமி ழ்ச்செல்வி, அப்போலின் அற்புதராஜ், மணிமேகலை, மகேஸ்வரி, லலிதா, ஜீவா, தோழமைக் கட்சியை சார்ந்த வழக்கறிஞர்கள் ஜெயபிரகாஷ், ஜெரோம், செந்தில்குமார், ஆனந்தன், ஜோதிகுமார், மாசே தூங்க், ஷீலா ராஜன், ஆர்த்தர், உள்பட 500 க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img