fbpx
Homeபிற செய்திகள்சாலையோர வியாபாரிகள், துப்புரவு பணியாளர்கள் 1000 பேருக்கு குடை, ரெயின் கோட் வழங்கல்

சாலையோர வியாபாரிகள், துப்புரவு பணியாளர்கள் 1000 பேருக்கு குடை, ரெயின் கோட் வழங்கல்

மழைக் காலம் துவங்கி உள்ள நிலையில் சாலையோர வியாபாரிகள், துப்புரவுப் பணியாளர்கள் பயன்படுத்தும் வகையில் 1000 பேருக்கு தரமான ரெயின் கோட் மற்றும் குடைகளை சிட்டிசன் அமைப்பு, டிஸ்னி நிறுவனத்தின் கார்ப்பரேட் சமூக பொறுப்பு பிரிவு, பூமி தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து சென்னை மெரினா கடற்கரையில் வழங்கியது.

இதில் குழந்தைகளுக்கென்றே பிரத்யேகமாக டிஸ்னி கார்ட்டூன் பொறிக்கப்பட்ட குடைகள் மற்றும் ரெயின்கோட்டுகள் 300 பேருக்கு வழங்கப்பட்டன.
மெரினா கடற்கரை மற்றும் பிற இடங்களில் சாலையோரம் உள்ள வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர்கள் மழைக் காலத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் தங்கள் பணிகளை தொடர 400 பேருக்கு ரெயின்கோட்டுகள் வழங்கப்பட்டன.

ஓய்வின்றி உழைக்கும் துப்புரவு பணியாளர்கள், கழிவு நீர் அகற்றும் பணியாளர்கள் என தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள 300 பேருக்கும் ரெயின் கோட்டுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் சிட்டிசன் அமைப்பின் மார்க்கெட்டிங் தலைவர் அடில் கூறுகையில், இங்கு தரமான தயாரிப்புகளை அவர்களுக்கு வழங்குவது என்பது சமூக பொறுப்புணர்வுடன் பணியாற்றும் அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இருக்கும்.

இவற்றை பெற்றுக் கொண்ட மக்களின் முகத்தில் நாங்கள் பார்த்த உற்சாகமானது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img