fbpx
Homeபிற செய்திகள்கண்ணை கட்டி சிலம்பாட்டச் சாதனை

கண்ணை கட்டி சிலம்பாட்டச் சாதனை

திண்டுக்கல்லில் உலக சாதனைக்காக கண்ணைக் கட்டி சிலம்பாட்ட நிகழ்ச்சி தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.

விடியல் தற்காப்பு கலைக்கூடம்

திண்டுக்கல் விடியல் தற்காப்பு கலைக்கூடம் மற்றும் குளோபல் உலக சாதனை புத்தகம் நடத்திய சிலம்பாட்டம், தனியார் பள்ளியில் நடைபெற்றது.

இதில் கண்ணைக் கட்டிக் கொண்டு 8 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி வீரர்கள், உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் மேயர் இளமதி, மாவட்ட ஹாக்கிச் சங்கத் தலைவர் காஜா மைதீன் கலந்து கொண்டு சாதனை முயற்சியில் ஈடுபட்ட வீரர் வீராங்கனைகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img